உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவுக்கான வெப்சைட் துவக்கம்: டில்லியில் கோலாகலம்

வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவுக்கான வெப்சைட் துவக்கம்: டில்லியில் கோலாகலம்

#PravasiBharatiyaDiwas #PBD #MinisterJaishankar #IndianDiaspora #MahatmaGandhi #SuvenduAdhikari #Kolkata மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்காவில் இருந்து 1915ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி நாடு திரும்பினார். மகத்தான அந்நாளை நினைவுகூறும் வகையில், பிரவாசி பாரதிய திவஸ் என்ற பெயரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இம்முறை 19வது பிரவாசி பாரதிய திவஸ், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2027 ஜனவரி 7 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வெப்சைட் துவக்க விழா, டில்லியில் இன்று நடந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெப்சைட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியும் பங்கேற்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 7 - 9 வரை கொல்கத்தாவில் பிரவாசி பாரதிய திவஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ வெப்சைட் இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மேற்கு வங்க அரசு பொறுப்பேற்று நடத்துகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாக செயல்படுகின்றனர். அவர்களின் அறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்டவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேற்கு வங்கத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன், இந்தியர்கள் பலர் மொரீசியஸ், பிஜி, கரீபியன் தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகினர். அவர்களின் வம்சாவளியினர் இன்றும் அங்கு வாழ்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் தங்கள் சொந்த மண்ணின் கலாசாரம், பெருமை, வரலாற்றை அறிய இந்த நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும் என ஜெய்சங்கர் பேசினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும். அதில் வெல்வாேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பம். இந்தியாவின் கலாசார, வரலாற்று பின்னணியை வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் அறிய இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !