உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவே கடைசியா இருக்கட்டும்: கட்சியினருக்கு பிரேமலதா வார்னிங் Premalatha Vijayakanth angry |Dmdk

இதுவே கடைசியா இருக்கட்டும்: கட்சியினருக்கு பிரேமலதா வார்னிங் Premalatha Vijayakanth angry |Dmdk

சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தஞ்சை, ஒரத்தநாடு சட்டசபை தொகுதிளுக்கான தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு குறைந்த அளவிலேயே கட்சியினர் வந்திருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பொதுச்செயலாளர் பிரேமலதா பேசும்போது அதை வெளிப்படுத்தினார். அழைப்பிதழில் உள்ள கட்சிக்காரர்களின் பெயர்களை காட்டி பேசிய அவர், பதவியை மட்டும் கேட்டு வாங்குகிறிீர்கள் ஆனால் வேலை செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? என்றார். என்ன கூட்டமே இல்லை என மாவட்ட செயலாளரிடம் கேட்டால் திங்கட்கிழமை வேலைக்கு போய்விட்டார்கள் என்கிறார். அப்படியானால் நாங்க வேலை இல்லாம வந்திருக்கோமா? என காரசாரமாக பேசினார்.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ