உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி! | President Visit Nilgiri | President Murmu

4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி! | President Visit Nilgiri | President Murmu

4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று நீலகிரிக்கு வந்துள்ளார். டில்லியில் இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு கோவை ஏர்போர்ட் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு செல்வார் என திட்டமிட்டப்பட்டது. இந்த சூழலில் நீலகிரியில் மோசமான வானிலை காரணமாக கார் மூலம் கோத்தகிரி வழியாக ஊட்டி புறப்பட்டு சென்றார். கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. காளப்பட்டி , அன்னூர் , மேட்டுப்பாளையம் மற்றும் உதகை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ