வன்முறையை பொறுக்க மாட்டோம்; அதிபர் பைடன் எச்சரிக்கை | America incident | New orleans attack | New ye
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அதிகாலை 3.15 மணியளவில் திடீரென கார் ஒன்று மக்கள் கூட்டத்துக்கு நடுவே புகுந்தது. நடைமேடையில் இருந்த மக்களை இடித்தவாறு கூட்டத்திற்குள் நுழைந்த கார், சாலையில் இருந்தவர்கள் மீது மோதியது. காரில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தார். போலீசாரும் அவர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். ஓடும் காரின் கதவை திறந்து குதித்த நபர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பிச்சென்றார். புத்தாண்டு கொண்டாட்டத்தில், நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பிடல்களில் அட்மிட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், படுகொலைகளை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் இதை செய்துள்ளார் என்றனர்.