எதிர்ப்பை மீறி உள்ளே வந்த பாட்னா தலைமை நீதிபதி President of India Appoints 2 Judges for SC
மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி அலோக் ஆராதேAlok Aradhe, பீகாரின் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி விபுல் பஞ்சோலிVipul M Pancholi ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொலிஜியம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 1964ல் பிறந்த நீதிபதி அலோக் ஆராதே மத்திய பிரதேச ஐகோர்ட்டில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2007ல் சீனியர் வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார். 2009ல் மத்திய பிரதேச ஐகோர்ட் கூடுதல் நீதிபதியானார். பின்னர் 2011ல் நிரந்தர நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். 2016ல் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதியாக சென்ற அவர் அங்கேயே சில காலம் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் 2018ல் கர்நாடக ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, அங்கேயும் சில காலம் தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டார்.