கை குழந்தையோடு புலம்பும் தாய்மார்கள் | Primary Health Centre | Coimbatore
கோவை செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரும் தாய்மார்கள் அலைகழிப்படுகின்றனர். பகல் நேரத்தில் நர்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பதில்லை. வேலை என சொல்லிவிட்டு வெளியே வேறு பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் சொல்லும் இடத்துக்கு குழந்தைகளை தூக்கி சென்றால் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. நர்ஸ்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேடி பிடித்து ஊசி போட வேண்டி இருக்கிறது.
ஆக 29, 2024