உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டை பலவீனப்படுத்துவது கும்பலின் திட்டம்: மோடி ஆவேசம் Prime Minister Narendra Modi attacks opposi

நாட்டை பலவீனப்படுத்துவது கும்பலின் திட்டம்: மோடி ஆவேசம் Prime Minister Narendra Modi attacks opposi

பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் 60 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். சில நாட்களுக்கு முன் கும்பமேளாவில் ஏற்பட்ட எதிர்பாராத நெரிசலில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். பக்தர்களை புறந்தள்ளிவிட்டு விஐபிக்களை ஸ்பெஷலாக கவனித்ததுதான் நெரிசலுக்கு காரணம் என ராகுல் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் மத்திய அரசையும், உபி பாஜ அரசையும் விமர்சித்தனர். இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா என மம்தா பானர்ஜி சொன்னார். இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி தந்துள்ளார். மத்தியபிரதேசத்தில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: ஹிந்து மத நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் பல நூற்றாண்டுகளாக பல வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அடிமை மனப்பாங்கு கொண்டவர்கள். வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நமது மத நம்பிக்கைகள், கோயில்கள், துறவு கலாசாரம் மற்றும் மரபுகளை இழிவாக பேசி வருகின்றனர். ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை அவமதிக்கின்றனர். நம் மதம் மற்றும் கலாசாரம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர். நம் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சமூக ஒற்றுமையை குலைப்பதே இந்த கும்பலின் நோக்கம். இப்படிப்பட்ட தலைவர்களுக்கு ஆதரவளித்து நம் நாட்டையும், ஹிந்து மதத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. எனவே, மக்கள் விழிப்புடன் இருந்து ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ