இந்தியாவில் நடக்கும் AI உச்சி மாநாடு; ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை Prime Minister's statement
ென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் 3வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் அதன் வாய்ப்புகள், வளங்கள் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முக்கியமான டெக்னாலஜிகளுக்கு தீவிர போட்டி நடக்கிறது. இது மனித குலத்திற்கு கவலை அளிக்க கூடிய விஷயம். மேலும் இது, புதுமைக்கும் தடையாக அமைகிறது. இதற்கு தீர்வு காண, அடிப்படை மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும் என மோடி குறிப்பிட்டார். நிதியை மையமாக கொண்டதாக இல்லாமல் மனிதர்களை மையமாக கொண்டு டெக்னாலஜி பயன்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தியா தனது அனைத்து டெக்னாலஜி திட்டங்களிலும் இந்த தொலைநோக்கு பார்வையை ஒருங்கிணைக்க முயன்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு உலகளாவிய நன்மைக்காக பயன்படுத்தப்படுவதையும், தவறாக பயன்படுத்தினால் அது தடுக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்காக, அடிப்படை கொள்கைகளுடன் உலகளாவிய ஒப்பந்தம் நமக்கு தேவை. மனித வாழ்க்கையில், பாதுகாப்பு, பொது நம்பிக்கையை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை தடுக்க வேண்டும். #G20Summit #PmModiSpeech #ModiSpeechG20 #ModiStatement #TechnologyDevelopment #artificialinteligence