உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாதிரியார் பிரின்ஸ் கால்வின் விவகாரம் மீண்டும் பூகம்பம் Prince Calvin coimbatore|BJP vs MK Stalin

பாதிரியார் பிரின்ஸ் கால்வின் விவகாரம் மீண்டும் பூகம்பம் Prince Calvin coimbatore|BJP vs MK Stalin

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தின் பாதிரியார் பிரின்ஸ் கால்வின். ஜூன் 16ஆம் தேதி ஆலயத்தில் ஒரு நடந்த ஆராதனை நிகழ்ச்சியில், இந்து மதத்தினரின் நம்பிக்கைகளையும், காலம் காலமாக ஹிந்துக்கள் பின்பற்றி வரும் வாழ்வியல் முறையான சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்தி பேசினார். இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக பிரின்ஸ் கால்வின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது இந்து முன்னணி உட்பட பலர் புகார் கொடுத்தனர். உடனே பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை