உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை தேடும் போலீஸ் prisoners Escape| andhra chodavaram sub jail| sub

சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை தேடும் போலீஸ் prisoners Escape| andhra chodavaram sub jail| sub

ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் சோடவரம் சப் ஜெயிலில் வார்டன் ஆக பணியாற்றுபவர் ராஜு. இவர், சமையல் பணிகளை கவனிப்பதற்காக, சிறை கைதிகள் ராமு, ரவிக்குமார் ஆகியோரை செல்லில் இருந்து வெளியே அழைத்து வந்துள்ளார். அப்போது, கைதிகள் இருவரும் வார்டன் ராஜுவை சுத்தியலால், தலையில் தாக்கி உள்ளனர். மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் சரிந்து விழுந்தார். உடனே அவரிடம் இருந்த சாவியை பறித்துக்கொண்டு கைதிகள் இருவரும் சிறையில் இருந்து தப்பி ஓட்டி உள்ளனர். தலையில் காயமடைந்த வார்டன் ராஜு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய கைதிகளில் ராமு, திருட்டு வழக்கில் கைதானவர். மற்றொரு கைதி ரவிக்குமார் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றியவர். பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை மோசடி செய்தவர். இருவரையும் சோடவரம் போலீசார் தேடி வருகின்றனர். சிறையில்பாதுகாப்பு மீறல் தொடர்பாக காவலர்களிடமும் விசாரணை நடக்கிறது. #PrisonersEscape #SodavaramSubJail #AndhraPradesh #WardenAttack #PrisonBreak #InmateEscape #SecurityBreach #JailBreak #Warden

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ