ரூ. 100 கோடி மோசடி புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் மீது பாய்ந்தது குண்டாஸ்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அரசகுமார். தி.மு.க., நிர்வாகியான இவர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் துவங்கி, அதன் தலைவராகவும் உள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக அரசகுமார் மீது புகார் எழுந்தது. பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசகுமாருக்கு எதிராக போலீசில் புகார் செய்தனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை போலீசார் அரசகுமாரை செய்தனர். இந்நிலையில், அரசகுமார் மீது, 50க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, கமிஷனர் உத்தரவுப்படி அரசகுமார் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெற பெருமளவு லஞ்சம் தர வேண்டியிருந்ததாக, பள்ளி நிர்வாகிகள் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், திமுக நிர்வாகி அரசகுமார் மீதான குண்டாஸ் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #private_schools #school_approval #100_crore #arasakumar #gundas_act #Bribe_for_approval #cheating_case #Anbil_magesh #Dmk_corruption #bribe #dmk_functionry #TNpolitics #TVK #CM_vijay #Tamilnadu #Tamilnews #Curretaffairs #Breakingnews