பேராசிரியைக்கு தொல்லை: பேராசிரியருக்கு மாணவர்கள் தர்மஅடி professor attacked chennai engineering col
சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சு ராஜீவ் (36). அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 27. பேராசிரியைக்கு சஞ்சு ராஜீவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் இருக்கும் இடங்களுக்கு சென்று டார்ச்சர் கொடுத்துள்ளார். சஞ்சு ராஜீவ் எல்லை மீறி நடந்து கொண்டதால் சக பேராசிரியர்களிடமும் மாணவர்களிடமும் விஷயத்தை சொன்னார் பேராசிரியை. பேராசிரியர்களுக்கான அறையில் வைத்தே சஞ்சு ராஜீவுக்கு சக பேராசிரியைகள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் கல்லூரி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் மொத்தமாக திரண்டனர். சஞ்சு ராஜீவை வெளியே இழுத்து வந்தனர். நீ என்ன பண்ண; நீயே சொல்றியா இல்லியா? என ஒரு பேராசிரியை கேட்க சஞ்சு ராஜீவ் எதுவும் சொல்லாமல் மழுப்பினார். அப்போது மாணவர்கள் சூழ்ந்து நின்று அடித்தனர். கேளம்பாக்கம் போலீசார் வந்து சஞ்சு ராஜீவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பேராசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.