8 வருடம் சிறையில் இருந்து வந்த கணவன் கண்ட காட்சி: அடுத்து நடந்த பயங்கரம் | Property dispute
சேலம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். வயது 35. இவரும் ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த பெரிய கள்ளிப்பட்டிசேர்ந்த நல்லசாமி என்பவரும் நண்பர்கள். நல்லசாமி ஜேசிபி டிரைவராக பணியாற்றி வந்தார். 2017ல் சந்திரனுக்கும் அவரது தாத்தா,பாட்டிக்கும் இடையே சொத்து தகராறு உண்டானது. அப்போது நல்லசாமியை உதவிக்கு அழைத்த சந்திரன் சொத்துக்காக அவர்களை கொலை செய்தார். தாத்தா பாட்டியை கொன்ற வழக்கில் சந்திரன், அவருக்கு உதவிய நல்லசாமி போலீசில் கைதாகினர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சந்திரனுக்கு 2024ல் ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது நண்பர் நல்லசாமியின் குடும்பத்தை சந்தித்தார். அடிக்கடி நல்லசாமி வீட்டுக்கு உதவி செய்வது போல சென்ற சந்திரன், அவரது மனைவி சிந்தாமணியிடம் நெருங்கி பழகினார். தனக்கு உதவ வந்த நண்பன் சிறையில் இருக்கிறானே என்பதை நினைத்து பார்க்காமல் அவருக்கு துரோகம் செய்தார்.