உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமராவதி பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சால் விபரீதம் Protest against Jagan Mohan Reddy at Andhra | YSR

அமராவதி பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சால் விபரீதம் Protest against Jagan Mohan Reddy at Andhra | YSR

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான தனியார் டிவி சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில், அமராவதியை சேர்ந்த பெண்களை சிலர் இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிரகாசம் மாவட்டத்தில், ஜெகன்மோகனுக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜெகன்மோகன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, பிரகாசம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜெகன்மோகனின் கான்வாய் மீது சிலர் செருப்பு வீசினர். இதையடுத்து, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், கல்வீச்சு மற்றும் அடிதடி சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ