உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர் ஸ்டிரைக்; நாறுகிறது சென்னை மாநகராட்சி | Sanitation Workers Protest

தூய்மை பணியாளர் ஸ்டிரைக்; நாறுகிறது சென்னை மாநகராட்சி | Sanitation Workers Protest

தூய்மை பணியாளர் ஸ்டிரைக்; நாறுகிறது சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சியில் 1 கோடி பேர் வசிக்கின்றனர். தினமும், 6000 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இதற்காக 17 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். குப்பைகள் சரியாக அகற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்ததால், கடந்த 2010ம் ஆண்டு முதல், ஒப்பந்த அடிப்படையில்தான் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன் பிறகும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால், தனியார் குப்பை மேலாண்மை நிறுவனங்களிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, திருவொற்றியூர், மணலி, மாதவபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலத்தூர் உள்ளிட்ட பல மண்டலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இப்போது, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலங்களையும் தனியார் குப்பை மேலாண்மை நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை