விளை நிலங்களில் குப்பை கொட்டும் பல்லடம் மாநகராட்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த இடத்தில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக திட்டமிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஸ்பாட்டிற்கு விரைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். ஊர் மக்களிடம் கருத்து கேட்காமல் எப்படி இங்கு குப்பை கொட்ட தயார் செய்யலாம். மரங்களை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதித்தால் பின்நாளில் ஊரையே குப்பை மேடாக மாற்றி விடுவீர்கள். மேலும், விவசாயம் நிறைந்த இப்பகுதியை மாநகராட்சி அழிக்க நினைப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். எக்காரணம் கொண்டும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள விடமாட்டோம். கோர்ட் மூலம் நிச்சயமாக தடை உத்தரவு பெறுவோம் என தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் என 36க்கும் பேருக்கும் மேற்பட்டோர் கோர்ட் உத்தரவு பெற்றுதான் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்கிறோம். உங்களுக்கு ஆச்சேபம் என்றால் கோர்ட்டில் கேளுங்கள். பணிகளை தடுத்து நிறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினர். தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கொட்டும் பணிகள் துவக்கப்பட்டன. பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால், சின்னகாளிபாளையம் கிராமத்தில் இன்று காலை முதல் பரபரப்பு நிலவியது. குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கும் விளை நிலங்களில் குப்பை கொட்டுவதை தட்டிக்கேட்ட அப்பாவி குடியிருப்பு வாசிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்லை என தரம் பிரித்து குப்பை மேலாண்மையை முறையாக கையாள தெரியாத மாநகராட்சி அதிகாரிகளால் குடியிருப்போர் படும் துயரம் சொல்லி மாளாது. இதற்கு கோர்ட் தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கொதிப்புடன் கூறினர். #PublicProtests #MunicipalGarbage #GarbageDumping #Palladam #Tiruppur #WasteManagement #CommunityAction #EnvironmentalAwareness #ProtectOurLand