உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே வீட்டில் 3 பேர் கதைமுடிப்பு: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் | Puducherry | gang war | rowdy

ஒரே வீட்டில் 3 பேர் கதைமுடிப்பு: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் | Puducherry | gang war | rowdy

யார் பெரிய தாதா? என மோதல் 3 ரவுடிகளை சாய்த்த கேங் லீடர் அதிகாலையில் பகீர் சம்பவம் புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் பாழடைந்த ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்து இன்று அதிகாலை பயங்கர சத்தம்கேட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பெரியகடை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை அளித்தது. 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மற்றொரு இளைஞர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வெட்டு காயங்களுடன் இருந்த இளைஞரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். 3 சடலங்களைகளை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கொலை நடந்த இடத்தை போலீஸ் டிஐஜி சத்யசுந்தரம் பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் ரோஜர் கொலை நடந்த வீட்டில் இருந்து டிவி நகர் செல்லும் சந்து வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் ரவுடிகள் என்பது உறுதியானது. மறைந்த பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷிக் (25), திடீர் நகரை சேர்ந்த தேவா(25), ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த ஆதி (24) என தெரிய வந்தது. முதல்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் வருமாறு: 3 பேரும் கொலை செய்யப்பட்ட இடம் பிரபல ரவுடி சத்யாவுக்கு சொந்தமானது. இவன் மீது பல்வேறு கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பெரியகடை போலீஸ் நிலையத்தில் முக்கிய ரவுடிகள் பட்டியலில் இவன் பெயர் முதலில் உள்ளது. அரியாங்குப்பத்தை சேர்ந்த அஸ்வின் தலைமையில் ஒரு ரவுடி கும்பலுக்கும்,, சத்யா தலைமையிலான ரவுடி கும்பலுக்கும் யார் பெரிய ரவுடி என்பதில் போட்டி இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் சத்யா கும்பலை சேர்ந்த அரியாங்குப்பம் முகிலன் பண்ருட்டியில் கொலை செய்யப்பட்டான். இதில் அஸ்வின் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சத்யா உறுதியாக நம்பினான். இதனால் அஸ்வின் மற்றும் கூட்டாளிகள் மீது சத்யா கடும் ஆத்திரத்தில் இருந்தான். அஸ்வினின் முக்கிய கூட்டாளிகளாக ரஷீத், தேவா, ஆதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் 3 பேரும் டிவி நகரில் நேற்று உலா வந்த விஷயம் சத்யாவுக்கு போனது. தன்னையும் கொலை செய்ய அவர்கள் வந்திருக்கலாம் என சத்யா நினைத்தான். நள்ளிரவில் கூட்டாளிகளுடன் சென்று அவர்களை மடக்கிப்பிடித்து பாழடைந்த கட்டடத்துக்கு இழுத்து வந்துள்ளான். அங்கு அவர்களை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளான் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர். தலைமறைவான சத்யா மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாதா தெஸ்தான் கடந்த 2008ம் ஆண்டு உழவர்கரை ஜெஜெ நகர் வீட்டில் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டான். அதன்பிறகு, மகன் ரிஷிக் ரவுடி அஸ்வின் கும்பலில் சேர்ந்தான். கொல்லப்பட்ட ரிஷிக், தேவா, ஆதி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை