உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காகிதமில்லா நடைமுறைக்கு மாறிய புதுச்சேரி சட்டசபை | Puducherry assembly | Paperless system | Speaker

காகிதமில்லா நடைமுறைக்கு மாறிய புதுச்சேரி சட்டசபை | Puducherry assembly | Paperless system | Speaker

புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதல்முறை ₹8 கோடியில் முடிந்த பணிகள் புதுச்சேரி அரசின் 15வது சட்டசபையின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 11 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14ம் தேதியுடன் முடிந்து, காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற பொதுவான விதி உள்ளது. அதன்படி புதனன்று சட்டசபை கூடுகிறது. 2024-25ம் நிதிஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள், சட்ட முன்வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு, சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதன்பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் துவங்குகிறது. இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையை காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றும் நேவா திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கான முழு நிதியை பார்லிமென்ட் விவகாரதுறை ஏற்றுக்கொண்டது. திட்டத்தை நிறைவேற்ற கொல்கத்தாவை சேர்ந்த நிம்பஸ் சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு 8.6 கோடிக்கு பணியாணை வழங்கப்பட்டது. இப்போது புதுச்சேரி சட்டசபையை காகிதம் இல்லா சட்டசபையாக மாற்றும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. புதனன்று சட்டசபை கூடும் நிலையில், இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்வர் ரங்கசாமி முறைப்படி தொடங்கி வைக்கும் நிலையில், முன்னதாக சபாநாயகர் செல்வம் சட்டசபையில் ஆய்வு செய்தார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை