புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: நடந்தது என்ன? puducherry assembly mla arumugam N. Rangaswamy PS to
புதுச்சேரி இந்திரா நகர் எம்எல்ஏவாக இருப்பவர் ஆறுமுகம். என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அரசு கொறடாவும் அவர்தான். இந்திரா நகரைச் சேர்ந்த மக்கள், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி கேட்டு முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் மனு கொடுப்பது வழக்கம். அதன் மீது முதல்வரின் தனிச் செயலாளர் அமுதவன், விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிதியுதவியை வழங்கி வந்துள்ளார். இதையறிந்த ஆறுமுகம் அமுதவன் அறைக்கே சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்டுள்ளார். நான் எம்எல்ஏவா இருக்கேன்; நான் நலத்திட்டங்களை மக்களுக்கு கொடுத்துட்டு போறேனே; நீங்க ஏன் நடுவுல? என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே; நீங்களே பயனாளிகிட்ட நிவாரணம் கொடுத்தா? அப்புறம் நாங்க எதுக்கு? என ஆறுமுகம் கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டுத்தான் நிவாரண உதவிகளை வழங்கினேன் என அமுதவன் கூறியதும் ஆறுமுகம் டென்ஷன் ஆனார்.