சிறுமிக்கு நேர்ந்த சோகம்: புதுச்சேரி மக்கள் கொதிப்பு Puducherry dog attack shool girl admitted ho
எல்லா தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கடந்த மாதம் 11ம்தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நாய்களின் உரிமை காக்க பேரணிகள் நடத்தினர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உத்தரவில் சில திருத்தங்களை செய்தது. நாய்களை கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என கடந்த மாதம் 22ம் தேதி தீர்ப்பு கூறியது. நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சையும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்; நாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பல அம்சங்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி வீதிகளில் இரவும் பகலும் கட்டுப்பாடின்றி தெருநாய்கள் அலைந்து திரிகின்றன. தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாய்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. நேற்று புதுச்சேரி மையப்பகுதியான எஸ்.வி. பட்டேல் சாலையில், நடைபாதையில் விளையாடிய ஒரு சிறுமியை ஒரு நாய் பாய்ந்து வந்து கடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவியை பெற்றோர் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். நாய் கடித்து விட்டு ஓடியதும் சிறுமி ரத்தம் சொட்ட சொட்ட கதறி துடிக்கும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாய் பிரச்னைக்கு புதுச்சேரி அரசு தீர்வு காண வேண்டும் என்பதுதான், எஸ்.வி. பட்டேல் சாலையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. #Puducherry #DogAttack #SchoolGirl #AdmittedToHospital #PoliceInvestigation #AnimalSafety #ChildProtection #CommunityNews #PuducherryNews #EmergencyCare #DogBite #SafetyFirst #PublicAwareness #IncidentReport #Healthcare #PetResponsibility #LocalCommunity #CrisisResponse #SupportForVictims