மருந்து மோசடியில் பெருந்தலைகள் அதிரடி கைது-பரபரப்பு puducherry medicine purchase scam | health scam
புதுச்சேரியில் 2018 முதல் 2019ம் ஆண்டு வரை கர்ப்பிணிகளுக்கு வழங்கிய சத்து மாத்திரைகள், குழந்தைகளுக்கு வழங்கிய வைட்டமின் ஏ மருந்துகள் தரமற்று இருந்ததால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிப்பை ஏற்படுத்திய மருந்துகள் அனைத்தும் உடனடியாக திரும்ப பெறப்பட்டன. சோதனையில் அவை தரமற்றவை என்பத தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றிய மருந்தாளுனர் நடராஜன் என்பவர் தனது மனைவி புனிதா பங்குதாரராக உள்ள சாய்ராம் ஏஜென்சி மற்றும் தனது நண்பர் பெயரில் உள்ள பத்ம ஜோதி ஏஜென்சி மூலம் முறைகேடாக மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்தது தெரியவந்தது. இதன்மூலம் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்திருந்தனர். மருந்தாளுனர் நடராஜன் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 2.5 கோடி ரூபாய் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இன்னொரு பக்கம் மருந்து கொள்முதல் பற்றி இந்திய தணிக்கை குழு விசாரித்தது மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. முறைகேட்டில் ஈடுபட்ட மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடுத்தது.