புயலை சமாளிக்க 121 நிவாரண முகாம் தயார் | Puducherry Rain | Fengal Cyclone
ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று காலை துவங்கிய கனமழை மாலை வரை இடைவிடாமல் பெய்தது. பின் இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 7.2 செமீ மழை பெய்தது. அதே போல், காரைக்காலில் 9.6 செமீ மழை பெய்தது. புதுச்சேரி கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால், மக்கள் கடற்ரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும்புவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நவ 27, 2024