உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புழுதி மயமான புதுச்சேரி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏரியா | Dust flies on road | Bus stand | Puducherry |

புழுதி மயமான புதுச்சேரி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏரியா | Dust flies on road | Bus stand | Puducherry |

புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதனால் ஜூன் 16 முதல் கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் பயணிகள் வேறு வழியின்றி ஒரு வித தயக்கத்துடனே தற்காலிக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். சிறிய மழைக்கே சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஆற்று மணல் கொட்டி நிரப்பியது. மழை சமயத்தில் உள்ளே சென்று வெளியே வரும் பஸ்கள் ஈர மணலை பஸ் ஸ்டாண்டை ஒட்டி உள்ள புதுச்சேரி - கடலூர் சாலை முழுவதும் பரப்பி விடுகின்றன. மழை ஓய்ந்து வெயில் வந்ததும் சாலையில் ஒட்டிய ஈர மணல் காய்ந்து காற்றில் பறப்பதால் புழுதி மணலில் வண்டி ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மணல் சறுக்கி விபத்துகளும் நடப்பதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏரியாவை கடந்து செல்லும் மக்கள் பீதியில் உள்ளனர்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை