2 குழந்தைகள் உட்பட 4 பேர் சீரியஸ்! | Pudukkottai | Accident | Police Investigation
தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். இன்று காலை 11 மணி அளவில் புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. சரக்கு வேனுக்கு பின்னால் முருகன் என்பவர் ஓட்டி வந்த காரும் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் செந்தமிழ்ச்செல்வன் கார் மற்றும் சரக்கு வேன் சின்னாபின்னமானது. செந்தமிழ்ச்செல்வன், மனைவி அருணா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களுடன் வந்த மற்றொரு பெண் மற்றும் 2 குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அதே சமயம் சரக்கு வேனில் டிரைவர் அருகே பயணம் செய்த இலுப்புரை சேர்ந்த சுதாகரும் சடலமாக மீட்கப்பட்டார்.