உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரிமினல் வழக்கு பதிவு; பூஜா விவகாரத்தில் UPSC அதிரடி!

கிரிமினல் வழக்கு பதிவு; பூஜா விவகாரத்தில் UPSC அதிரடி!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர், வயது 34. அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, செய்திகளில் இடம்பெற தொடங்கினார். பயிற்சி அதிகாரியாக பணியாற்றிய போதே வீடு, கார், சொந்த காரில் சைரன் விளக்கு என சிறப்பு சலுகைகள் கேட்டு நச்சரித்தார். பூஜாவின் தந்தை திலிப் ராவ் கேத்கரும் முன்னாள் அரசு அதிகாரி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், வேட்பு மனுவில் ஆண்டு வருமானம் 43 லட்ச ரூபாய் என்றும், ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் என குறிப்பிட்டு இருந்தார். இந்த சூழலில் தனது குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் என குறைத்து காட்டி, பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் பூஜா கேட்கர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கிரீமி லேயர் சான்றிதழ் வாங்கினார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை