கழிவு நீரில் சிக்கிய 50,000 மக்கள்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Puliyanthoppu sewage | Chennai
இந்த வருஷம் தீபாவளி இல்ல
சாக்கடையில் வாழும் மக்கள்
அதிர வைக்கும் காட்சி
சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி பகுதி கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் கழிவுநீர் அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் செயல்படுகிறது.
இங்கே அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பழுதுதாவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
புளியந்தோப்பு, பட்டாளம், கே.எம் கார்டன் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கழிவு நீர் தேங்கி உள்ளது.
பொதுவாக சென்னையில் மழை பெய்தால் தான் ரோட்டில் தண்ணீர் தேங்கும்.
ஆனால் இங்கே மழை பெய்யாமலேயே தெருக்களில் 3 அடி உயரத்துக்கு கழிவு நீர் மட்டுமே தேங்கி இருக்கிறது.
வீட்டு கதவை திறந்தால் நாற்றம் தாங்க முடியவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை.
கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.