/ தினமலர் டிவி
/ பொது
/ ஒவ்வொரு இந்தியரும் உங்களால் வலிமை பெறுகிறார்கள் என புகழாரம்! Pulwama Attack | PM Modi
ஒவ்வொரு இந்தியரும் உங்களால் வலிமை பெறுகிறார்கள் என புகழாரம்! Pulwama Attack | PM Modi
2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வெடிபொருள்களுடன் வந்த ஒரு கார் ராணுவ வாகனத்தில் மோதியது. இதில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என கண்டறியப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
பிப் 14, 2026