/ தினமலர் டிவி
/ பொது
/ குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உதவிய கிராம மக்கள் | Pune Rape Case | Dinamalar
குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உதவிய கிராம மக்கள் | Pune Rape Case | Dinamalar
மகாராஷ்டிவின் புனே மாநகரின் ஸ்வர்கேட் பஸ் ஸ்டாண்டில் கடந்த 25ம் தேதி அதிகாலை 26 வயது இளம் பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். இளம் பெண் தனியாக நின்றிருப்பதை கவனித்த மர்ம ஆசாமி, அவருக்கு உதவி செய்வதாக கூறி, ஆள் இல்லாத அரசு பஸ்சில் வைத்து பலாத்காரம் செய்தான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். எப்போதும் பரபரப்பாக இருக்கும் புனே பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் வைத்து இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிப் 28, 2025