நண்பனை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் | Pune | Gang Rape | 21 years Old Girl |
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள போப்தேவ் காட் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில், 21 வயது இளம்பெண்ணும், அவரது நண்பரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 3 பேர் காரில் வந்தனர். காரில் இருந்து இறங்கிய ஒருவர் நள்ளிரவு நேரத்தில் இப்படி அமர்ந்து பேசக்கூடாது என கண்டித்தார். இருவரையும் போட்டோ எடுத்தார். திடீரென அவர்கள் வலுக்கட்டாயமாக இளம்பெண்ணை காரில் ஏற்றினர். தடுக்க வந்த நண்பரை அந்தஆசாமிகள் சரமாரியாக தாக்கிவிட்டு மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தினர். இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு 3 பேரும் காரில் தப்பினர். இன்று காலை நினைவு திரும்பியதும் இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். பெண்ணின் உடலில் பல காயங்கள் இருந்தன. அவரை போலீசார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நண்பரும் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.