பஞ்சாப்- ஹரியான எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேற்றம்
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் தங்கி போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு பஞ்சாப் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மார் 20, 2025