/ தினமலர் டிவி
/ பொது
/ தேசிய கபடி போட்டியில் மோதலுக்கு காரணம் இதுதான் punjab kabbadi tornament clash
தேசிய கபடி போட்டியில் மோதலுக்கு காரணம் இதுதான் punjab kabbadi tornament clash
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய கபடி போட்டி பஞ்சாபில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 36 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் போட்டி நடந்தது. தவறான புள்ளிகள் வழங்கியதை கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக வீராங்கனைகள் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் நாற்காலிகள் பறந்தன. தமிழக வீராங்கனைகள் காயமடைந்தனர். தமிழக அணி பயிற்சியாளர் பண்டியராஜை போலீசார் அழைத்து சென்றனர்.
ஜன 24, 2025