கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்! Puri Radha yatra | odisha | Three devotees Dead
ஒடிசாவின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கடந்த 27ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஜூலை 5 வரை யாத்திரை நடக்கிறது. முதல் நாளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து தேரை இழுத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஜெகன்நாதரை தரிசனம் செய்தனர். மூன்றாவது நாளான இன்று காலை 4 மணி அளவில் பெரிய அளவில் கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. சிலர் தேர் சக்கரத்தின் அருகே விழுந்து மூச்சுத் திணறினர். அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ரத யாத்திரையில் மூச்சுத் திணறி மூன்று பேர் இறந்ததற்கு ஒடிசா சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிச்சந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத யாத்திரைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பக்தர்கள் அரசு நிர்வாகத்தை குறை கூறி உள்ளனர்.