உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

பகவான் ஸ்ரீசத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926 நவம்பர் 23ம் தேதி பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கிய ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் புட்டபர்த்தியில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. வரும் 24ம் தேதி வரை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கிறது. கடந்த19ம் தேதி நடந்த ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், புட்டபர்த்தியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த திரவுபதி முர்முவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீ சாய் குல்வந்த் அரங்கில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகாசமாதியில் மரியாதை செய்தார். பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். #Puttaparthi #DroupadiMurmu #CentenaryCelebrations #BhagwanSriSatyaSaiBaba #AndhraPradesh #ChandrababuNaidu #LoveAllServeAll #HelpEverHurtNever #SaiBaba #SpiritualJourney #UnityInDiversity #CommunityService #Inspiration #IndianCulture #SaiDevotees

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ