/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் குண்டு வெடிப்பின் பகீர் பின்னணி | Quetta Blast | Pak Blast | BLA | Baloch Liberation Army
பாகிஸ்தான் குண்டு வெடிப்பின் பகீர் பின்னணி | Quetta Blast | Pak Blast | BLA | Baloch Liberation Army
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா Quetta. இந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரும் குவெட்டா தான். இங்குள்ள பிரதான ரயில்வே ஸ்டேஷனில் இன்று நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு மொத்த பாகிஸ்தானையும் அதிர வைத்தது. காலை 8:50 மணி அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அப்போது பெஷாவர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பிளாட்பாரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி ஒருவன் கூட்டத்துக்குள் புகுந்தான். சரியான நேரத்தில் வெடிகுண்டை வெடிக்கச்செய்தான். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது.
நவ 09, 2024