புதுச்சேரி பட்டம் வினாடி வினாவில் கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி முதலிடம்! Dinamalar | Pattam | Student Ed
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், தினமலர் நாளிதழ், பட்டம் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாக திகழ்கிறது.
பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில், மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை, பட்டம் இதழ் நடத்தி வருகிறது.
இந்தாண்டு புதுச்சேரி ஆச்சாரியா வோல்டு கிளாஸ் எஜூகேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது.
இதில் மொத்தம் 35 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்ட போட்டியில் வென்று, ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிச்சுற்று வினாடி வினா போட்டி புதுச்சேரி ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிடோரியத்தில் நடந்தது.
பள்ளி அளவிலான முதற்கட்ட வினாடி வினா போட்டியில் சொல்லி அடித்து கில்லிகளாக தெறிக்கவிட்டு களம் இறங்கிய மாணவர்களுக்கு இறுதி சுற்றில் பங்கேற்பதற்கான எழுத்து தேர்வு நடந்தது. 20 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டன.
இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு பள்ளி அணிகளும் அசத்தலாகவே பதில் அளிக்க, சிறந்த பள்ளி அணியை தேர்வு செய்வது நடுவர் குழுவிற்கு சவாலாகவே இருந்தது. பின் மாணவர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர் அடங்கிய எட்டு அணிகளுக்கு இறுதிபோட்டி ஐந்து சுற்றுகளாக நடந்தது. பட்டம் மாணவர் இதழ் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் அறிமுக உரையாற்றினார்.
இறுதிவரை பரபரப்பாக நடந்த வினாடி வினா போட்டியில் கடலுார் கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சஞ்சீவ், முகமது உமர் ஆகியோர் அடங்கிய அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சாரியா வோல்டு கிளாஸ் எஜூகேஷன் கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முதல் பரிசாக எச்.பி. லேப்டாப், பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினர்.
#Dinamalar #Pattam #StudentEdition #QuizCompetition #Pondicherry #Education #KnowledgeChallenge #StudentLife #QuizFun #LearnAndWin #DinamalarQuiz #PondicherryEvents #CompetitiveExam #StudentsOfPondicherry #CognitiveSkills #TriviaTime #AcademicExcellence #EngagingStudents #QuizMasters