சூரிய புயல் சீற்றம் அதிகரிப்பு சேட்டிலைட்களுக்கு ஆபத்தா? | solar storm to hit india - warns ISRO
சூரியனில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்புகள் சூரிய புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரிய புயல் பூமியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாசா, இஸ்ரோ போன்ற சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. சூரிய புயல் நிலவரத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை வழங்க இந்தியாவின் ஆதித்யா - எல்1 என்ற சூரிய கண்காணிப்பு விண்கலம், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் சூரியனில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் ஆக்டிவ் ரீஜியன் 4366 என்ற பகுதியில் இந்த சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதிக வலிமையான எக்ஸ் வகை வெடிப்பு என்று நாசா தெரிவித்துள்ளது.