/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரசாரின் பாரம்பரிய உடையை மாற்றிய ராகுல் | Rahul | Congress | Traditional dressing change
காங்கிரசாரின் பாரம்பரிய உடையை மாற்றிய ராகுல் | Rahul | Congress | Traditional dressing change
தமிழக அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி - சட்டையும், வட மாநில அரசியல்வாதிகள் வெள்ளை குர்தாவும் அணிவது தான் வழக்கம். தற்போது, எல்லாமே மாறி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் வரை திமுகவில் தொடர்ந்த வேட்டி - சட்டை கலாசாரம் மெதுவாக மாறத் துவங்கி உள்ளது. தற்போது முதல்வரும், துணை முதல்வரும் பேன்ட் - சட்டை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். காங்கிரசிலும் இதே மாற்றம் துவங்கி விட்டது. காங்கிரசார் அணியும் பாரம்பரிய உடையை ராகுல் மாற்றிவிட்டார். டி - ஷர்ட் அணிந்து தான், பார்லிமென்டுக்கே வருகிறார். இதை பாஜ கிண்டல் செய்தாலும் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை.
ஜன 26, 2025