1 தொகுதியில் இவ்ளோ மோசடி; ராகுல் புகாரை மறுத்த அதிகாரிகள் rahul gandhi| cheating claims| election
பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான கேள்விக்கு லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பதில் அளித்தார். அவர் கூறும்போது, தேர்தல் கமிஷன் இந்திய தேர்தல் கமிஷன் போல் செயல்படவில்லை. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை முட்டாள்தனமானது என சொன்னார். உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை. கர்நாடகாவில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான 100 சதவீத ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. 90 சதவீதம் அல்ல; அது 100 சதவீத உறுதியான ஆதாரம்.