பஜாஜ் பல்சருடன் போட்டோ: ராகுல் பதிவு வைரல் Rahul |Indian Companies| Colombia|
லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ளார். வழக்கமாக அவர் வெளிநாடுகள் செல்லும்போது இந்தியா பற்றி எதிர்மறையான கருத்துக்களை கூறுவது வழக்கம். இந்த முறையும் ராகுல் அதையே செய்துள்ளார். கொலம்பியாவில் உள்ள EIA பல்கலையில் பேசும்போது இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருவதாக கூறினார். இந்தியா இன்ஜினியரிங், சுகாதாரம் போன்ற துறைகளில் சிறந்த திறன்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் நிர்வாக கட்டமைப்பில் சில குறைபாடுகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். இந்தியாவால் உலகத்துக்கு ஏராளமான நல்ல விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், இந்திய அமைப்பில் சில பிழைகள் உள்ளன. அதனை சரிசெய்வதற்கு இந்தியா சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக உள்ளது. ஆனால் தற்போது, அந்த ஜனநாயக அமைப்பானது பல திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ராகுல் கூறினார். ராகுலின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜ எம்.பி. சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது: ராகுல் இந்திய எதிர்ப்பு சக்திகளின் உதவியாளராக மாறி வருவதாக அவரது பேச்சில் தெரிகிறது. அதனால் வழக்கம்போல வெளிநாட்டு மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக அவர் பேசி இருக்கிறார். அதிலும் ஜனநாயகத்தின் சின்னமாக திகழும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என சுதான்சு திரிவேதி கூறினார். ராகுலின் கொலம்பியா பல்கலைக்கழக பேச்சுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அவர் இந்திய தொழில் நிறுவனங்களை பாராட்டியிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கொலம்பியாவில் பஜாஜ் பல்சர் பைக்கை பார்த்து ஆச்சரியப்பட்ட ராகுல், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கொலம்பிய நாட்டில் பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் வாகனங்களை பார்க்கிறேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் புதுமைகளால் வெற்றி பெற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான பணி என்று ராகுல் தெரிவித்துள்ளார். #Rahul #IndianCompanies #Colombia #BusinessInColombia #Entrepreneurship #GlobalTrade #Innovation #Export #InvestInColombia #CrossCulturalBusiness #SouthAsia #MarketExpansion #BusinessOpportunity #CulturalExchange #StartupJourney #BilateralRelations #TradePartnerships #EmergingMarkets #GlobalEntrepreneurs #SustainableBusiness