/ தினமலர் டிவி
/ பொது
/ வெறும் 5 கேள்வியில் காங்கிரசை கதறவிட்ட பாஜ rahul vs anurag thakur | bjp vs congress | india vs china
வெறும் 5 கேள்வியில் காங்கிரசை கதறவிட்ட பாஜ rahul vs anurag thakur | bjp vs congress | india vs china
பார்லிமென்ட்டில் சீன ஆக்கிரமிப்பு, அமெரிக்க வரி விதிப்பு பற்றி எதிர்கட்சி தலைவர் ராகுல், பாஜ எம்பி அனுராக் தாக்கூர் இடையே கடும் மோதல் வெடித்தது. பாஜவையும் ஆர்எஸ்எஸ்சையும் கடுமையாக விளாசினார் ராகுல். பதிலுக்கு காங்கிரசை கிழித்தார் அனுராக் தாக்கூர். அப்படி என்ன விவாதம் நடந்தது என்பதை பார்க்கலாம். ராகுல் பேசியது: நம் நாட்டின் 4000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சீனா அடாவடியாக வந்து அமர்ந்திருப்பது எல்லோரும் அறிந்த விஷயம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம் வெளியுறவு செயலாளர் சீன தூதருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவதை பார்த்து மிரண்டு போய் விட்டேன். என் கேள்வி என்னனா, உண்மையிலேயே அந்த ஏரியால என்ன தான் நடக்கிறது.
ஏப் 03, 2025