என் வாயை அடைக்க பார்க்கிறது பாஜ rahulgandhi| sikh | bjp
அமெரிக்கா சென்றிருந்த லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், கடந்த 10ம் தேதி வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் மத சுதந்திரம் தொடர்பாக பேசினார். இந்தியாவில் நடக்கும் மோதல் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா இல்லையா; அவர்கள் காப்பு அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா, குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது பற்றியதாக இருக்கிறது. எல்லா மத்தினருக்கு அதே நிலைதான் என ராகுல் பேசியிருந்தார். இதற்கு பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ராகுல் பதில் அளித்துள்ளார். அமெரிக்காவில் நான் கூறிய கருத்து பற்றி பாஜ பொய்களை பரப்பி வருகிறது. நான் பேசியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என்பதை, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சீக்கிய சகோதர சகோதரிகளை கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? வழக்கம் போல பாஜ பொய்களை பரப்ப தொடங்கிவிட்டது. அவர்களால் உண்மையை சகித்து கொள்ள முடியவில்லை. அதனால், என் வாயை அடைக்க பார்க்கிறார்கள்.