உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுல் பேச்சால் அனல் பறக்கும் வயநாடு தேர்தல் களம் | Wayanad Lok Sabha by-election | Priyanka

ராகுல் பேச்சால் அனல் பறக்கும் வயநாடு தேர்தல் களம் | Wayanad Lok Sabha by-election | Priyanka

கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, பாஜ வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரி போட்டியிடுகின்றனர். வயநாடு மானந்தவாடியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்காவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ராகுல் பிரசாரம் செய்தார். பிரியங்காவை சகோதரியாக பெற்றது என் அதிர்ஷ்டம். அவரை சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் வயநாடு மக்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது தந்தை ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய நளினியை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டவர் பிரியங்கா.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ