உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரச்சான்று பெறாத பொருட்கள் பறிமுதல் Raid at Amazon Flipkart warehouse | Thiruvallur online Warehous

தரச்சான்று பெறாத பொருட்கள் பறிமுதல் Raid at Amazon Flipkart warehouse | Thiruvallur online Warehous

ஆன்லைனில் அனைத்து வகை பொருட்களயும் விற்பனை செய்து வரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், அவ்வப்போது காலாவதியான, தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவயலில் அமேசான் நிறுனனத்திற்கு சொந்தமான குடோனில், BIS எனப்படும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடிநீர் பாட்டில், பிளாஸ், சீலிங் பேன், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்றவை தரமற்ற நிலையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் பல பொருட்களில் பிஐஎஸ் தர முத்திரை இல்லாமல் இருந்தது. அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 3,376 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல் திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் செயல்படும் பிளிப்கார்ட் நிறுவன குடோனில் நடந்த சோனையில் தரமற்ற குழந்தைகளுக்கான டயப்பர்கள், பிஐஎஸ் முத்திரை இல்லாத ஸ்டீல் பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தரமற்ற பொருட்களை சேமித்து வைத்து, அவற்றை விற்பனை செய்த குற்றத்திற்காக, 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ