சொந்த ஊருக்கு சென்றபோதும் விடாத விஜிலென்ஸ்
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியின் கமிஷனராக இருப்பவர் ஏகராஜ். இதற்கு முன், பல நகராட்சிகளில் பணியாற்றி உள்ள இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் சென்றது. அதனடிப்படையில், தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் உள்ள ஏகராஜ் வீட்டில் ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். வீடு பூட்டி இருந்தது. மெடிக்கல் லீவில் ஏகராஜ் சொந்த ஊரான திருவள்ளூருக்கு சென்றிருந்தார். போலீசார் சுத்தியலால் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து வீடு முழுவதும் அலசினர். காலை தொடங்கி இரவு வரை 11 மணிநேரம் சோதனை நடந்தது. வங்கி பரிவர்த்னைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சென்றனர்.
ஜூலை 01, 2025