உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயில்வே போட்ட உத்தரவு: பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் railway banned coconut water tender coconut

ரயில்வே போட்ட உத்தரவு: பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள் railway banned coconut water tender coconut

லோகோ பைலட் எனப்படும் ரயில் இன்ஜின் டிரைவர்கள் வேலைக்கு வரும்போதும், வேலையை முடித்து விட்டு கிளம்பும்போதும் ஆல்கஹால் மீட்டர் சாதனம் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மது குடித்திருக்கிறார்களா? என்பது தெரிந்து விடும். இந்த சோதனையின்போது கேரளாவைச் சேர்ந்த பல இன்ஜின் டிரைவர்கள் மது குடித்திருப்பதாக சாதனம் காட்டிக்கொடுத்தது. ஆனால், சம்பந்தப்பட்ட டிரைவர்களோ தாங்கள் குடிக்கவே இல்லை என சாதித்தனர். இளநீர்தான் குடித்தேன்; அது இப்படி காட்டுனா நான் என்ன பண்ண முடியும் என ஒரு டிரைவர் கேட்டார். இன்னொருவர் நான் காஃப் சிரப் குடித்துவிட்டு வந்தேன் என காரணம் சொன்னார். வாழைப்பழம் சாப்பிட்டோம்; கூல்ட்ரிங்ஸ் குடிச்சோம் என மது பரிசோதனையில் சிக்கும் லோகோ பைலட்டுகள் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது அவர்கள் மது குடிக்கவில்லை என ரிப்போர்ட் வந்தது. இதனால் கேரள ரயில் நிலையங்களில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. லோகோ பைலட் சங்கத்தினருக்கும் ரயில்வே உயரதிகாரிகளுக்கும் பல சமயங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷன் அதிகாரிகள் கூடிப்பேசினார்கள். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் டிவிஷன் சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை