உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாநில வாரியாக ரயில்வே நிதி ஒதுக்கீடு லிஸ்ட் ரிலீஸ் Railway budget| Railway fund| Nirmala| INDI

மாநில வாரியாக ரயில்வே நிதி ஒதுக்கீடு லிஸ்ட் ரிலீஸ் Railway budget| Railway fund| Nirmala| INDI

மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23ம் தேதி பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் பெயர் கூட பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை என திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் நடைமுறையில் இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தெளிவான அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறாவிட்டாலும், மாநில நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்த பட்ஜெட்களிலும் பல மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை