உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நொடியில் உயிர் பயத்தை காட்டிய ஆற்று வெள்ளம் | Rain | Flood | Theni Flood

நொடியில் உயிர் பயத்தை காட்டிய ஆற்று வெள்ளம் | Rain | Flood | Theni Flood

தேனியில் பெய்த தொடர் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி அணைப்பிள்ளையார் தடுப்பணை, கொட்டக்குடி ஆற்று வழியாக வரும் நீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடாங்கிபட்டிக்கு மண் லோடு ஏற்றி டிப்பர் லாரி கொட்டக்குடி ஆற்று வழியாக சென்றுள்ளது. முதலில் நீர்வரத்து குறைவாக இருந்த நிலையில் டிரைவர் ஆற்றை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென அதிகப்படியான நீர் வர தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் லாரி மூழ்கும் அளவுக்கு வெள்ளம் பாய தொடங்கியது. கிளீனர் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தார். நீச்சல் தெரியாத டிரைவர் லாரியின் மேல் பகுதியில் ஏறி நின்று சத்தம் போட்டார்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !