/ தினமலர் டிவி
/ பொது
/ இரவு திடீரென 200 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் | Rain | Rain Alert | Drainage
இரவு திடீரென 200 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் | Rain | Rain Alert | Drainage
கிருஷ்ணகிரியில் நேற்று இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. நெடுங்கல், போச்சம்பள்ளி, பெனுகொண்டபுரம், பாரூர் பகுதிகளில் கனமழை பெய்தது. காவேரிப்பட்டினம் எம்ஜிஆர் நகரில் 2 அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கி நின்றது. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். சாக்கடை ஆக்கிரமிப்பினால் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி விடுகிறது. அதிகாரிகளிடம் சொல்லியும் பலனில்லை என மக்கள் புலம்பினர்.
ஆக 12, 2024