உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது, அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நேக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை தொடரும். இன்று, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை 26ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 27 ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். 28 ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும். 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 29, 30 தேதிகளில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைபெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை