/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, 2 மற்றும் 3ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடி, மின்னல், மழையுடன், மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். தமிழகம், புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க அளவு வெப்பநிலையில் மாற்றம் இருக்காது.
ஆக 01, 2026